உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து டெல்லிக்குச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, கான்பூர்-இட்டாவா-ஆக்ரா நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர். 27 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேருந்தில் மொத்தம் 45 பயணிகள் இருந்துள்ளனர். ஓட்டுநர் தூங்கியிருக்கலாம் என்பதே விபத்துக்கான முதற்கட்ட காரணமாகக் கூறப்படுகிறது.