ஊட்டி அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 பள்ளி மாணவர்களுக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சத்துணவில் வழங்கப்பட்ட முட்டையைச் சாப்பிட்டதால் இந்த வயிற்று வலி ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.