16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், தர்மசாலாவில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டத்தில், முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்துள்ளது. இதனால், 188 ரன்களை வெற்றி இலக்காக வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்குகிறது.