பிறந்தநாளில் உயிரிழந்த 18 வயது மாணவி

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ராஜன் - பிந்து தம்பதியின் மகள் ஸ்ரேயா(வயது 18). இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேரவிருந்தார். அவரது பிறந்தநாளான நேற்று முன்தினம் காலை குளிக்கச் சென்ற ஸ்ரேயா குளியலறையில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து ஸ்ரேயாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் அவர் இருதய பிரச்னையால் இறந்தது தெரிந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி