பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 18 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுச் விடுதலை இராணுவம் (BLA) அறிவித்துள்ளது. மேலும், பலுசிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேறி, அப்பகுதி சுதந்திரம் அடையும் வரை தங்களது ஆயுதப் போராட்டம் ஓயாது எனவும் அக்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.