ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20ஆம் தேதி முதல் 108 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் அதிகரித்து, வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 18 லட்சம் கோழிகள் இறந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கோழி வளர்ப்புத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ரூ.54 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.