புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுவன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருமநாடு கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், அன்புச்செல்வனை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியது. இதில் தலையிலும், கைகளிலும் பலத்த காயமடைந்த அன்புச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: Kalaignarnews