தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் 3,25,523 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, அதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 18,905 பேரும், திருச்சியில் 16,055 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 1,492 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.