தென் ஆப்பிரிக்காவில் 536 கி.மீ. இடைவெளியில் நடந்த இரு வெவ்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பீட்டர்மரிட்ஸ்பர்க் நகருக்கு வெளியே காருக்குள் 8 பேரும், பிரிட்டோரியா அருகே குடிசைப் பகுதியில் 9 பேரும் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நடந்த கொலைகளுக்குப் பழிவாங்கும் தாக்குதலாக இது இருக்கலாம் எனக் காவல் ஆணையர் டாமி ம்தோம்பெனி தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.