புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் விஷச்சாராயம் குடித்ததால் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த உயிரிழப்பு தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், விஷச்சாராயம் தயாரிக்கப்பட்ட இடம் மற்றும் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி