பாகிஸ்தானின் கராச்சி நகரின் பழைய பஜார் பகுதியில் கேஸ் கசிவால் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 4.30 மணியளவில், ரம்ஜான் முதல்நாள் நோன்பு நேரத்தில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதி முழுவதும் கடுமையாக சேதமடைந்ததுடன், பலர் காயமடைந்தனர். விபத்துக்கான துல்லிய காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.