2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் வார விடுமுறைகளை சேர்த்து மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகவும், 6 நாட்கள் வார இறுதி விடுமுறை நாட்களாகவும் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் ஜன.15 முதல் 17 வரை பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனால் வங்கி பணிகளை மேற்கொள்ள திட்டமிடுவோர் இந்த விடுமுறை பட்டியலை முன்கூட்டியே கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.