தமிழக பத்திரப்பதிவுத்துறையில் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரே நாளில் 158 சார் பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தவெக அரசு அமைந்ததில் இருந்து பல்வேறு அரசுத் துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனைகளில் லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு துறைகளில் அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இன்று பத்திரப்பதிவுத்துறையில் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே போல் சில சார்பதிவாளர்கள் கேட்ட இடத்திலேயே மாறுதல் பெற்றுள்ளனர்.