விமான நிலையத்தில் 158 வேலை வாய்ப்புகள்

இந்திய விமான நிலைய ஆணையத்தின் சரக்கு போக்குவரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் நிறுவனம் (AAICLAS), பாதுகாப்பு பரிசோதகர் (புதியவர்) பணியிடங்களுக்கு 158 பேரை நியமிக்க அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது/ஓபிசி/ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு 60%, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் அவசியம். அதிகபட்ச வயது 27. ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 18 முதல் ஜூன் 8 வரை அவகாசம். பொது/ஓபிசிக்கு ரூ. 750, எஸ்சி/எஸ்டி/ஈடபிள்யூஎஸ் பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 100 கட்டணம். தகுதியானோர் பட்டியல், நேர்காணல், மருத்துவத் தகுதி அடிப்படையில் தேர்வு. விவரங்களுக்கு www.aaiclas.aero.

தொடர்புடைய செய்தி