ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 1,500 தினக்கூலித் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக மாநகராட்சியில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தனியார் மயமாக்கல் நடைமுறைக்கு வந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
நன்றி: குமுதம்