தெலுங்கானா மாநிலத்தில் அரசு பணியில் உள்ளவர்கள் தங்களது பெற்றோரை பராமரிக்க தவறினால், அவர்களது மாத சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். பிடித்தம் செய்யப்படும் அந்த தொகை, நேரடியாக பாதிக்கப்பட்ட பெற்றோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இத்திட்டம் அசாம் மாநிலத்தின் 'பிரணாம்' சட்டத்தை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.