இந்தியாவில் வங்கி மோசடிகள் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று (டிச.2) தெரிவித்துள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜே சந்தேசரா, சேத்தன் ஜே சந்தேசரா, திப்தி சி சந்தேசரா உள்ளிட்டோர் இந்த தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தப்பியோடியவர்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு மற்றும் அவர்களது பெயர்களை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.