மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் 14,582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. கணிணி வழியில் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்ட தேர்வு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. கல்வி தகுதி உள்ளவர்கள், எஸ்.எஸ்.சி.-யின் அதிகாரபூர்வ https://ssc.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.