தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் கடந்த செப்டம்பர் மாதம் தெருநாய்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 1,405 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் 331 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தடுப்பூசிகளும் வழங்கப்பட்டன. அறுவை சிகிச்சைக்குப் பின் நாய்கள் பாதுகாப்பாக மீண்டும் அதே இடங்களுக்கு விடப்பட்டன. தெருநாய்கள் தொல்லை குறித்து புகார் அளிக்க 1800 203 0401 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.