தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில், “2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் உள்ளனர். இந்த நீண்டகாலப் பிரச்னைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை உயிர்ப்பித்து, நீடித்தத் தீர்வை அடைய மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி