வழக்கமான 22 மற்றும் 18 கேரட் தங்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது 14 கேரட் தங்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 58.3% தங்கமும், 41.7% செம்பு, வெள்ளி உள்ளிட்ட பிற உலோகங்களும் கலந்திருக்கும் எனவும், இதிலும் BIS ஹால்மார்க் முத்திரை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு கிராம் ரூ.8,450 ஆகவும், ஒரு சவரன் ரூ.67,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்புதிய அறிமுகம் குறித்து அண்மையில் MJDTA தலைவர் ஜெயந்திலால் சலானி பேசியிருந்தார்.