உத்தரபிரதேசம்: மெயின்புரி மாவட்டத்தின் பாஜக மகிளா மோர்ச்சா தலைவரின் மகன் சுபம் தொடர்பான 130 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சுபம் மீது அவரது மனைவி சிகரெட்டை வைத்து சித்ரவதை செய்கிறார் என்று காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். சுபம் தனது காதலியுடன் இருக்கும் வீடியோக்களை எடுத்து தனது மனைவியிடம் காட்டி மனரீதியாக அவரை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.