பெங்களூருவைச் சேர்ந்த நிஷித் (13) 8-ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 30ஆம் தேதி நிஷித்தை மர்ம நபர்கள் கடத்திச் சென்றவர்கள் அவர் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினார்கள். இந்நிலையில் நேற்று (ஜூலை.31) நிஷத் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்ப முயன்ற அவர்களை சுட்டுப் பிடித்தனர்.