உத்திரமேரூரில் 2 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான வெறும் 2 மணி நேர இடைவெளியில் வரலாறு காணாத வகையில் 13 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் நகர் பகுதியில் கடந்த 4 மணி நேரத்தில் 5.8 செ.மீட்டர் அளவிற்கு பலத்த மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளது. குறுகிய நேரத்தில் பெய்த இந்த அதிதீவிர கனமழையால் அப்பகுதிகளின் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕