சென்னையில் 12ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை வானகரம் அருகே 12ஆம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனும் அவரது நண்பரான ஷியாம் (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. ரத்தக்காயங்களுடன் காவல்நிலையம் சென்ற மாணவரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகனத்தின் சாவியை பறித்தது தொடர்பான தகராறில் மாணவரை அரிவாளால் வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி

✕
✕