ஓராண்டில் 1,207 திரைப்படங்கள்.. 60 வயது முதியவர் கின்னஸ் சாதனை

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த கிளன்வுட் ஜாஸ்கின் ஜூனியர் (60), ஓராண்டு காலத்தில் அதிக திரைப்படங்களைப் பார்த்தவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். ஏப்ரல் 2024 முதல் ஏப்ரல் 2025 வரையிலான காலகட்டத்தில், யார்க் ஹேவனில் உள்ள ரீகல் திரையரங்கில் அவர் மொத்தம் 1,207 திரைப்படங்களைப் பார்த்துள்ளார். இதற்காக தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை திரையரங்கில் தங்கியிருந்து படங்களை ரசித்துள்ளார். ஏற்கனவே ஒரே திரைப்படத்தை அதிகமுறை பார்த்த சாதனையும் இவருடைய பெயரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕