உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை கால தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று (மார்ச் 18) மற்றும் நாளை 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் பயணிகள் மீண்டும் திரும்புவதற்காக மார்ச் 22-ம் தேதி 565 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in இணையதளம் மூலம் முன்கூட்டியே தங்களது பயணத்தை உறுதி செய்துகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.