புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண் தனது சிறிய வீட்டிற்குள் 120 நாய்களை வளர்த்துவருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யூடியூப் மூலம் அவருக்கு வருமானம் அதிகம் வருவதால், நாய்களை வளர்ப்பதாகவும், அந்த நாய்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். நோய் வாய்ப்பட்ட நாய்களை வெளியே விட்டுவிடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், நாய்கள் அனைத்தையும் பாசத்துடன் சுத்தமாக பராமரிப்பதற்காக அப்பெண் கூறியுள்ளார்.
நன்றி: பாலிமர்