தென் அமெரிக்க நாடான பெருவில் நிலச்சரிவால் இரண்டு படகுகள் ஆற்றில் மூழ்கியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். அமேசான் ஆற்றின் உகாயாலி பகுதியில் படகு துறையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் நீரில் கவிழ்ந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. படகில் சுமார் 50 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை 9 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளன. 25 பேர் காயமடைந்துள்ளனர்.