நடப்பு கல்வியாண்டு முதல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 2017-18ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இனி நடைபெறாது. 11ஆம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் தனியாக வழங்கப்படாமல், ஒருங்கிணைந்த +2 மதிப்பெண் சான்றிதழில் மட்டுமே மதிப்பெண்கள் இடம்பெறும். மேலும், பொதுத்தேர்வில் ஏற்கெனவே தோல்வியடைந்த 11ஆம் வகுப்பு மாணவர்கள், 2030ஆம் ஆண்டு வரை அரியர் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நன்றி:News18Tamil