ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் மற்றும் கலைஞர் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,149 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களில் சேர, விண்ணப்பதாரர்கள் டிச.31 அன்று 17 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும், மேலும் 12-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதியானோர் நவ.14-ம் தேதிக்குள் மருத்துவ கல்லூரிகளின் துணை முதல்வர்களை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.