மின் கம்பத்தை தொட்ட 11 வயது சிறுமி பலி

பெங்களூருவை சேர்ந்த தனிஷ்கா (11) என்ற சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த மின் கம்பத்தை தனிஷ்கா தொட்ட போது மின்சாரம் பாய்ந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின் வாரியத்தின் அலட்சியமே தங்கள் மகள் மரணத்திற்கு காரணம் என தனிஷ்காவின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி