பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) ஐ.பி.எல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றவியல் கவனக்குறைவைக் காரணம் காட்டி ஆர்.சி.பி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.