ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஆற்றில் சிப்பிகளை சேகரித்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றிய அரசு தலா ரூ.2 லட்சமும், கர்நாடக மாநில அரசு தலா ரூ. 5 லட்சமும் நிவாரண உதவி அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி