மூலப்பொருட்களின் இருப்பை உறுதி செய்யும் பொருட்டு பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின் பிரதமருக்கு முதலமைச்சர் எழுதும் முதல் கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதில், லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11% வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.