செங்கல் லாரி மோதி 11 மாடுகள் பலி: வாசுதேவநல்லூர் அருகே சோகம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே, பேச்சியப்பன் என்பவர் வளர்த்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகள், சாணம் உரத்திற்காக தோப்புகளில் அடைக்கப்பட்டிருந்தபோது, மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.22) காலையில் சாலையைக் கடக்கும்போது வேகமாக வந்த செங்கல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்தன. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி