சேலம் ஆத்தூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பானுமதி. தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இவர்களது மூத்த மகள் தாரணிஸ்ரீ அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சிறுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை சக தோழிகள் கேலி கிண்டல் செய்ததாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.