நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயம்!

பெங்களூரு: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், நியூசிலாந்து வெற்றி பெற 107 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை நியூசி. அணி தொடங்கியது. அப்போது 4 பந்துகளே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி