இலங்கை கடற்பகுதியில் சென்ற ஈரான் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலில் தத்தளித்த 30 பேரை இலங்கை கடற்படையினர் உயிருடன் மீட்டு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த பிப்., 28 முதல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி: Iran News 24