மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் எரிபொருள் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கவலை தெரிவித்துள்ளார். தற்போது மத்திய அரசு வணிக ரீதியிலான LPG விநியோகத்தில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருவதால், உணவு துறையினருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.