நுரையீரல் புற்றுநோயின் ஆரம்பக்கால அறிகுறிகளை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட கால தொடர் இருமல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி மற்றும் இருமும்போது ரத்தம் வெளியேறுதல் போன்றவை இதன் எச்சரிக்கை அறிகுறிகளாக கருதப்படுகின்றன. புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது.