100 சவரன் நகை, ரூ.6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 100 சவரன் நகை, ரூ.6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் என்பவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில், அவரது மனைவி ரினோ தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் சுற்றுலா சென்ற நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி