அதிவேகமாக 100 சிக்ஸர்கள்: ஐபிஎல் வரலாற்றில் முதலிடம் பிடித்த வீரர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் 56 ரன்கள் குவித்ததோடு ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் அடித்த சிக்ஸர் மூலம், ஐபிஎல் தொடரில் மிக குறைந்த பந்துகளில் (933 பந்துகள்) 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு சென்னை அணியின் சிவம் துபே 992 பந்துகளில் 100 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை படிதார் முறியடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி