விசிகவில் இருந்து விலகி 100 பேர் பாமகவில் இணைந்தனர்

விழுப்புரத்தில் விசிகவினர் 100 பேர் பாமகவில் இணைந்துள்ளனர். அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள விசிக, பாமக இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்த சூழலில், விழுப்புரம் அடுத்த கோலியனூர் பகுதியைச் சேர்ந்த விசிக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கோலியனூர் இரா.ஞானவேல் தலைமையில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாமகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நேற்று (பிப்., 05) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் விசிகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி