100 பேருக்கு உடல்நலக் குறைவு.. சிக்கன் விநியோக நிறுவனத்தை மூட ஆணை

சென்னை கந்தன்சாவடியிலுள்ள சிக்கன் விநியோக நிறுவனத்தை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நேற்று (ஜூன்.03) சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தொழிலாளர்கள் சுமார் 100 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், உணவு விநியோக நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிக்கன் விநியோகம் செய்த நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி