தவெக நிர்வாகியிடம் இருந்து 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தவெக நிர்வாகி சந்துரு, அவரது தந்தை ஆறுமுகம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். தவெக அரசு போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் சூழலில், தவெகவினர் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.