10 வயது சிறுமி கடத்தி கொலை: 2 பேர் கைது

கோவை சூலூர் அருகே சாக்லேட் வாங்கி தருவதாக கூறி 10 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று கொலை செய்த வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்த சிறுமியின் உடற்கூறாய்வு (பிரேத பரிசோதனை) தற்போது நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி