தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற 10 பைக்குகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின. தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சாலை மார்க்கமாக விஜய் சென்ற நிலையில், அவரை பின்தொடர்ந்து தவெக தொண்டர்கள் கூச்சலிட்டபடி அஜாக்கிரதையாக பயணித்தனர். பலர் தலைக்கவசம் அணியாமல் பைக்குகளை ஓட்டிச் சென்ற நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் மோதி கீழே விழுந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: Spark+