தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூலிக்கப்படுவதாக வரும் புகார்களைத் தீவிரமாக கண்காணிக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் கடைகளை கண்டறிந்து அறிக்கை கொடுக்க உளவுத்துறைக்கு, சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.