உத்தரப் பிரதேசம்: பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் நேற்று (பிப்.,14) இரவு ஏற்பட்ட கோர விபத்தில், 10 பக்தர்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்திலிருந்து கும்பமேளாவுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற கார் ஒன்று பேருந்து மீது மோதியது. இதில், காரில் சென்ற 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல், மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில், 19 பேர் காயமடைந்தனர்.
நன்றி:PTI